kalarchikkai female medicine benefits

பெண்களின் கர்ப்பபையை பாதுகாக்கும் கழற்சிக்காய்

SIDDHA MARUTHUVAM

கழற்சிக்காய் கொடி வகை தாவரமாகும். கழற்சிக்காயை கர்பப்பை காவலன் என்றும் ஆண்களின் விதைப்பைக்கு காவலன் கூறுவார்கள். பெண்களின் கர்ப்பபையில் ஏற்படக் கூடிய கட்டிகள் மற்றும் நீர்கட்டிகள் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்க உதவும், கை கால் குத்தல் குடைச்சலைக் குறைக்கும். உடல் சூடு தனியும்.

கழற்சிக்காயின் சுவை கசப்பாக இருக்கும். கழற்ச்சிக்காய் விதையின் ஓடு சற்று கடினமாக இருக்கும். ஆகையால் உள்ளிருக்கும் பருப்பை சிறிய ஆட்டுக்கல்லில் இடித்தெடுத்தால் கழற்ச்சிக்காய்க்குள்ளே ஒரு பருப்பு இருக்கும்.

நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.

கழற்சிக்காய் தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.

வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *