மூல நோய் கட்டுப்பட சாப்பிட வேண்டிய உணவுகள் மூல நோய் குணமாக செய்ய வேண்டியது இப்படி ஒரு சூழலில் நோய்கள் தான் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் பலரும் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஓன்று தான் பைல்ஸ். இந்த பைல்ஸ் தொந்தரவு உள்ளவர்கள் என்ன உணவு முறையை மேற்கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மற்றும் என்ன உணவுகளின் மூல நோயிக்கு சிறந்தது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மூலம் நோய் எப்படி உருவாகிறது?
இந்த பைல்ஸ் நோய் எப்படி உருவாகிறது என்றால், மலம் துவாரத்தில் மலமானது ரொம்ப கெட்டியாக கடின தன்மையுடன் முக்கி வெளியே போகும்போது, இரத்த நாங்கள் தளர்வடைவதால் ஏற்படுவதுதான் பைல்ஸ். இத்தகைய பைல்ஸ் நோயை நாம் உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். அத்தகைய உணவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
மூல நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை: தண்ணீர் அதிகளவு அருந்துதல்
நார்ச்சத்துள்ள உணவுகள்
நீராவி உணவுகள்
சின்ன வெங்காயம்
வெந்தயம்
மூல நோய் குணமாக தண்ணீர்:
பைல்ஸ் நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு குறைந்து 2 முதல் 2 1/2 லிட்டர் தண்ணீரை கட்டாயம் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும் என்றால், அப்பொழுது தான் மலத்தை சரியான நிலையில் வெளியேற்ற உதவும். ஆகவே மூலம் நோய் உள்ளவர்கள் தினமும் தண்ணீர் அதிகளவு அருந்துங்கள்.
மூல நோய் குணமாக நார்ச்சத்து உணவுகள்:
மூலம் நோய் உள்ளவர்கள் தங்களது உணவு முறையில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது. ஆகவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள், கீரைகளை அதிகளவு எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு நார்ச்சத்து அதிகம் நிறைந்த உறவுகளை எடுத்து கொள்வதினால் மலம் கெட்டியாவது தடுக்கப்படும். சரியான நிலையில் மலம் வெளியேற நார்ச்சத்து உணவுகள் உதவி செய்யும்.
மூல நோய் குணமாக நீராவி உணவுகள்:
பைல்ஸ் பிரச்சனை உள்ளார்கள் நீராவியில் செய்யப்பட்ட உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ளலாம். இதனால் மலம் கெட்டியாவது தடுக்கப்படும்.
குறிப்பாக இட்லி மற்றும் இடியாப்பம் மட்டும் இரவு உணவில் சேர்க்கலாம்.

மூல நோய் குணமாக சின்ன வெங்காயம்:
மூலம் நோய் உள்ளவர்கள் உங்கள் உணவு முறையில் சின்ன வெங்காயத்தை தினமும் அதிகளவு சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் காலையில் எழுந்த உடன் பல் துலக்கிவிட்டு சிறிதளவு சின்ன வெங்காயத்தை சப்பிட்டுவிட்டு வெந்நீர் குடிங்க இவ்வாறு செய்வதினால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மூல நோய்க்கு வெந்தயம்:
வெந்தையம் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள். இந்த வெந்தியத்தை மூலம் நோயினால் தினமும் அவஸ்தைப்படும் நபர்கள் இரவு சிறிதளவு வெந்தியதை ஊறவைத்து. மருந்தால் காலை வெறும் வயிற்றில் அந்த நீருடன் வெந்தியதை பருகி வந்தால் மூலம் பிரச்சனை வெகு சீக்கிரம் குணமாகும்.