மோசமான உணவு முறைகளால் தைராய்டு சுரப்பில் மாற்றத்தை உண்டு செய்யும். தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகளும், வாழ்வியலும் தாண்டி உணவு முறையும் அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சோயா பால், டோஃபு (சோயா பனீர்) போன்றவை ஒதுக்குவது நல்லது. சோயா தைராய்டு ஹார்மோன் உறிஞ்சுவதை தடுக்கும் திறனை கொண்டது.
அதே போன்று பதப்படுத்தப்பட்ட சோயா மற்றும் சோயா பால் தவிர்க்க வேண்டியது. ஏனெனில் அரிதாக இதில் உள்ள இராசயனங்கள் தைராய்டு ஹார்மோன் சுரப்பில் மாற்றங்களை உண்டாக்க கூடும்
அசைவ பிரியராக இருந்தால் ஆட்டின் சிறுநீரகம், இதயம் கல்லீரல் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் லிபோயிக் அமிலம் உள்ளது. இதை வேறு சில உணவுகளிலும் பெறலாம். ஆனால் இதை அதிகமாக எடுத்துகொண்டால் அது தைராய்டு செயல்முறையில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும். பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதலாக லிபோயிக் அமிலம் தைராய்டு மாத்திரைகளையும் பாதிக்க செய்யலாம்.
சல்பர் நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளும் போது உதாரணத்துக்கு சோளம், ஆளி விதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகமாக உள்ளது. இந்த உணவு பொருள்கள் தைராய்டு சுரப்பியால் அயோடின் உறிஞ்சுவதை பாதிக்க செய்கிறது. தைராய்டு பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், பாதிப்பை கொண்டிருந்தாலும் இதை தவிர்ப்பதுதான் நல்லது. பேக்கரி உணவுகளில் அயோடின் இருந்தாலும் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்குபவை. எப்போதும் அல்லது அதிக அளவு பேக்கரி உணவுகளை எடுத்துகொள்ளும் போது தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டு செய்கிறது அதனால் பேக்கரி உணவு பொருள்களை தைராய்டு இருப்பவர்கள் தவிரப்பதே நல்லது.
துரித உணவுகள் அவசரமான கட்டங்களில் நேரமின்மைக்கு கைகொடுக்க கூடியவை என்றாலும் கூட கெட்ட கொழுப்புகள் நிறைந்தவை. தைராய்டு பிரச்சனை கொண்டிருப்பவர்கள் இதை உணவில் சேர்க்கும் போது தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பை உண்டாக்கும். இந்த வகையான துரித உணவுகளில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டாலும் அது போதுமான அயோடின் சத்தை கொண்டிருக்குமா என்பதும் கவனிக்க வேண்டியதாகிறது.
அதோடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தை உண்டாக்குவதோடு அயோடின் அளவை குறைக்க செய்யும்.
கோதுமை, கம்பு மற்றும் பார்லியில் காணப்படும் ஒருவிதமான புரதம் பசையம் ஆகும். நீங்கள் தைராய்டு உடன் பசையம் ஒவ்வாமை கொண்டிருந்தால் நீங்கள் இந்த பசைய உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது சிறுகுடல்களை பாதிக்க செய்யும். தைராய்டு செயல்பாடில் மேலும் பாதிப்பை உண்டாக்க செய்யும்.
பசையம் ஒவ்வாமை மற்றும் தைராய்டு இரண்டுக்குமான தொடர்பு அதிகரிப்பதாக சான்றுகள் தெரிவிக்கிறது. உங்களுக்கு இந்த பசையம் ஒவ்வாமை பிரச்சனை இல்லையென்றால் அது தைராய்டை பாதிக்காது.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அழற்சிகளை உண்டாக்கும் உணவுகள் வீக்கத்தை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. அதனால் தைராய்டு நோயாளிகள் அழற்சி சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சர்க்கரை, வறுத்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு ( ரொட்டி, டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், வெண்ணெய் சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவை அழற்சியை உண்டாக்கும் உணவுகள்.
அயோடின் குறைபாடு இருந்தால் இந்த காய்கறிகளை பச்சையாகவோ, அல்லது அதிகமாகவோ, தனியாக ஸ்மூத்தியாகவோ எடுத்துகொள்வது ஆரோக்கியமானது கிடையாது. இந்த காய்கறிகளை வேக வைத்து எடுத்துகொள்வதன் மூலம் தைராய்டு பாதிப்பு குறையலாம்.