நெல்லி வத்தல் – 35 கிராம்
வாயுவிடங்கம் – 35 கிராம்
கடுக்காய் தோல் – 35 கிராம்
சிவதை வேர் – 35 கிராம்
சிவதை வேர் வாங்கி உள்புறம் உள்ள நரம்புகளை நீக்கி மேல்தோலை மட்டும் உபயோகிக்க வேண்டும். நரம்பு நீக்கிய தோல் பகுதியை பாலில் கலந்து பாலை சுண்டக் காய்ச்சிய பின் கழுவி வெயிலில் உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.
மேற்கூறிய நான்கு சரக்குகளையும் தனித்தனியே இடித்து சன்னமாக சலித்து பின் ஒன்று கூட்டி இதன் எடைக்கு சமமாக அதாவது 210 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அளவு, அனுபானம்: தினம் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் அளவு (ஐந்து கிராம்) சாப்பிட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்கவும்.
பயன்:
மலம் தாராளமாக ஒரு முறை அல்லது இரண்டு முறை சிக்கலின்றி கழியும்.