வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப் பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசெளகரியமான தன்மை தென்படும்.
உணவருந்தும் முன்பாக வயிற்று எரிச்சல் அல்லது வயிற்றில் ஏதோ அழுத்துவது போன்ற வலி காணப்பட்டால் அது Duodenal Ulcer – க்கும் உரிய அறிகுறியாகும்.

இதயத்தின் மேற்பகுதியில் எரிச்சல், வாந்தி, உடல் எடை திடீரென குறைந்து போதல் போன்றவையும் குடற்புண் வரும் அறிகுறி.
மலம் அடிக்கடி கழித்தலும், மலம் நிலையில் (Semi Solid) கழித்தலும், மலம் கறுப்பு நிறத்தில் வெளியேறுதல் குடற்புண்ணுக்கான அறிகுறியாகும்.
ஒருசிலருக்கு இரத்த சோசை (Anemia) முற்றிய நிலையில் ரத்த வாந்தி உண்டாகி குடற்புண்ணில் முற்றிய நிலையை (Bleeding Ulcer) காட்டும்.
குடற்ப்புண்ணை குணப்படுத்த மருந்துகளைவிட உணவுகளே சிறந்தது. உணவில் ஏற்படுத்தும் சீர்திருத்தமே நோயை விரட்டும் எனவே தேர்ந்த உணவுகளே சிறந்த மருந்தாகும்.