சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார்.

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரேமலதா விஜயகாந்த் ஆளுநரிடம் அளித்தார். இந்த சந்திப்பின் போது எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.