OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். ரித்தேஷ் அகர்வால் என்பவரால் 2012 இல் நிறுவப்பட்ட OYO நிறுவனம் ஆரம்பத்தில் முக்கியமாக பட்ஜெட் ஹோட்டல்களைக் ஆக்கிரமித்தது. OYO ரூம்களில் திருமணமாகாத இளசுகள் விதிமுறைகளை மீறி தங்குவதாக தெரிகிறது. பரவலாக சமூக வலைத்தளங்களில் OYO நிறுவனத்தை கிண்டலடித்து வருகின்றனர்.

தற்போது, OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்களில் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே என்றும் இளம் ஜோடிகள் திருமண சான்று காட்டியே அறைகளை புக் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், திருமணம் ஆகாத ஜோடிகள் கவலையடைந்துள்ளனர்.