டிசம்பர் 5, இன்று இரும்பு பெண்மணி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம். இதனை முன்னிட்டு அதிமுகவினர்,
ஒன்றுகூடி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர்வாலயம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தொண்டர்களுடன் மீண்டும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இது தொண்டர்கள் மத்தியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.