கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து ட்ரம்ப் போட்டியிட்டாா். அதிபர் தேர்தலுக்கு முன்பு, ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவுகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த அடல்ட் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை கூறினார். இந்த விஷயத்தை மறைப்பதற்க்காக அந்த நடிகைக்கு சுமார் 1.3 லட்சம் அமெரிக்க டாலா்பணம் ட்ரம்ப் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் ட்ரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை ட்ரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
தற்போது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குச் சிறைத் தண்டனையோ, அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் வழங்கப்பட இருக்கும் தண்டனையை எதிா்த்து ட்ரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், ட்ரம்ப்பின் அந்து மனு தள்ளுபடி குறிப்பிடத்தக்கது.