அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், தன்னை சார் ஒருவருடன் இருக்குமாறு கூறியது உண்மை என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி வாக்கு மூலம் அளித்திருப்பது உறுதியாகியுள்ளது.

குற்றவாளி தன் செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் மாணவி கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது குற்றவாளியின் மொபைல் போன் ப்ளைட் மோடில் இருந்ததாக காவல் ஆணையர் அருண் சொன்னது பொய் என்பதும் உறுதியாகியுள்ளது.

சி. சி.டி.வி பதிவு ஒன்றில் குற்றவாளியின் செய்போனுக்கு அழைப்பு வருவதும், அவர் பேசுவதும் பதிவாகி உள்ளது. குற்றவாளி மாணவியை அட்ஜஸ்ட் செய்து போகச் சொன்ன சார் யார் என்று தெரிந்து விட்டதாகவும், அவர் திருப்பூரை சேர்ந்தவராகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உண்மை சாரை மறைத்து விட்டு போலி சார் ஒருவரை பிடித்து வழக்கை முடிப்பார்களோ என்ற அச்சத்தையும் மாணவி தரப்பு வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்த தகவல்களை தமிழக டிஜிபி அவர்கள் மறுத்துள்ளார்.