ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக குறிவைக்கிறது, அதற்கு பதில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாக திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால் அதை ஏற்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கைவசம் இருக்க வேண்டும் என காங்கிரஸார் தெரிவிக்கின்றனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.