இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிஷ்கினின் பிசாசு 2 | ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நாயகியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, சில காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அவை தீர்ந்ததை அடுத்து, வரும் மார்ச் மாதத்தில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.