பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறைய ரசிகர்களை கொண்டுள்ள போட்டியாளர் தான் சௌந்தர்யா. இந்த பேமிலி வீக் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.
அதன்படி போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவதும், அழுவதும் சிரிப்பதும் என இந்த வாரமே ரொம்ப எமோஷனல் ஆக சென்றது. இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வருகை தந்துள்ளனர்.

இதில் போன சீசன் பிக் பாஸ் இல் பங்குபெற்ற விஷ்ணு வும் வருகை தந்திருக்கிறார். விஷ்ணுவும் சௌந்தர்யாவும் நீண்ட நாள் நண்பர்கள். இந்நிலையில் சௌந்தர்யா விஷ்ணு மீது உள்ள காதலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சி யாக உள்ளது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் இது போன்று நடப்பது இதுவே முதல் முறையாகும். ஆதலால் இன்றைய எபிசொட் இன் மீது ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
