BYD நிறுவனம் 6 மீட்டர் அகலம் வரையிலான தடைகளைத் தாண்டக்கூடிய YANGWANG U9 சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
U9, அதன் Disus X சஸ்பென்ஷன் அமைப்பின் உதவியுடன், தண்ணீர் நிறைந்த பள்ளங்களில் குதித்து, சிரமமின்றி சாலையின் வளைவுகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
இந்த கார் 1,287 hp வழங்கும் நான்கு மின்சார மோட்டார்களைக் கொண்டுள்ளது. 80 kWh பேட்டரியில் 465 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.
CES 2025-ல் வெளியிடப்பட்ட BYD-ன் யாங்வாங் U9 சூப்பர் கார், அதன் “ஜம்பிங் சஸ்பென்ஷன்” அமைப்புடன் புதுமையான தொழில்நுட்பத்தைக் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 2.36 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை தொடும். இதன் விலை ¥1.68 மில்லியன் (தோராயமாக $367,977) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.