சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் வரும் 12ஆம் திகதி பொங்கல் 2025 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் “மத கஜ ராஜா”. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி நடித்து, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரித்த மத கஜ ராஜா படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 வெளியாகிறது. இந்தப் படம் 2013 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய், 12 வருடங்கள் கழித்து வெளியாகிறது.
விஜய் அண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஷால் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.